இந்த பூமி மலைகள், கடல், நதி,காடுகள் அனைத்தும் இதில் வாழும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் சொந்தமானது.இது வெறும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல!! இயற்கையின் சக்திக்கு முன் மனித சக்தி ஒன்றுமல்ல.. சமீபத்திய உதாரணம் : ஜப்பானில் நடந்த பேரழிவு!! இது நாளை இங்கும் நடக்கும்,, ஏனென்றால் ஜப்பான் வேறு கிரகத்தில் இல்லை.. இந்த உலகம் காப்பாற்றப் பட வேண்டுமானால் ,உடனடியாக உலகம் முழுமைக்கும் , எங்கும் சுரங்கங்கள் தோண்டப்படக் கூடாது. கனிமங்களுக்காக ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் பூமித்தாய் வெட்டுப் படுவது தடுக்கப்பட வேண்டும். இயற்கை தந்த அரும் பெரும் கொடுப்பினை ஆகிய மலைகளைக் குடைவதும், தகர்ப்பதும் உடனடியாக தடுக்கப் பட வேண்டும். மேலும் இந்த பூமிக்குள் வெடிகுண்டு வைப்பது, அணுகுண்டுகளை வெடித்து பரிசோதிப்பது, ஹைட்ரஜன், நைட்ரஜன் வெடிகுண்டு சோதனை போன்றவை நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்!!
இல்லையேல், சிறிது காலங்களிலேயே இந்த உலகமானது, ஒரு பொறி உருண்டையை நாலா பக்கங்களிலும் ஆணியால் குத்தினால் எப்படி உதிருமா அது போன்று இந்த பூமி உருண்டை பொல பொலவென்று உதிர்ந்து விடாதா? மேலும் பலப்பல சோதனைகள் செய்வதை நிறுத்தாவிட்டால், குவாரிகள் என்று பூமியை பல கிலோ மீட்டர்கள் கணக்கில் தோண்டிக்கொண்டே போவதை நிறுத்தாவிட்டால், புவி ஈர்ப்பு விசை குளறுபடி அடைந்து உலகம் அழிந்து விடும்!!
அதெப்படி ஆயிராமாயிரம் ஆண்டுகள் இந்த பூமி 24 மணி நேரத்தில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றிவருகின்ற இந்த பூமி மன்சூரலிகான் சொல்வது போல திடீரென்று எப்படி அழியும் என்று கேட்கலாம்! கோடிக கணக்கான ஆண்டுகளாக இந்த பூமி இயற்கையோடு பாதுகாப்பாக இருந்தது!! ஆனால் இந்த சுமார் இருநூறு ஆண்டுகளாகத்தான் பூமியைக் குடைந்து அணுகுண்டுகள் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு , நிலக்கரி எடுக்க தங்கம் எடுக்க , இரும்பு எடுக்க கிரானைட்,தாதுக்கள் எடுக்க என்று பூமித்தாயை குடை குடை என்று குடைந்து இத பூலோக உருண்டையை ஈயம் பித்தளை பெரீச்சம்பழத்துக்கு போடும் ஓட்டை,உடைசல் பாத்திரமாக்கி விட்டார்கள்! அதன் விளைவுதான் இப்போது ஜப்பான் சுனாமிக்குப் பிறகு, ஜப்பான் நகர்ந்து விட்டதாகவும், பூமியின் அச்சே மாறி விட்டதாகவும் கிடைக்கும் செய்திகள்!
ஒரு பம்பரத்தை நாம் கையினால் சுழற்றிவிட்டால் பத்து,பதினைந்து அல்லது ஒரு இருபது நொடிகள் சுற்றி விட்டு நின்று விடும்.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு ஈர்ப்பு விசையோடு, ஒரு தாள நயத்தோடு - பெண்ணின் கருவறையில் குழந்தையைச்சுற்றி இருக்கும் பனிக்குடம் போல, ஓசோன் காற்று மண்டலத்தைச் சுற்றி அமைத்துக்கொண்டு பூப்போல வளம் வந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தை மனிதர்கள் சீரழிப்பது எவ்வாறு நியாயம்?

இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம்!
இந்த பூமித்தாயை காப்பாற்ற உலக அளவில் அனைத்து அறிஞர் பெருமக்களும் திரண்டு உடனடியாக ஒரு மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப் பட வேண்டும்.புயல் வேக வாழ்க்கையில் சொத்து, சுகம்,வசதி என பேராசை வாழ்க்கை வாழ்கிறோம்..... அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போட்டு ஆயிரம் கொடி, லட்சம் கோடி என மேலே மேலே சம்பாதிக்க ... இப்படியே போக ... லட்சக் கணக்கான டன்கள் மணல ஆற்றுப் படுகைகளில் அள்ள அள்ள இந்த பூமி பேராபத்தை நெருங்குகிறது!!
ஒரு நிமிடம் சிந்திப்பீர், செயல்பட வாரீர்!!
இவண்: மக்கள் மாநாடு கட்சி-தமிழர் களம - தமிழக மக்கள் கட்சி -
அனைத்திந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கம்-தமிழ் தன்னுரிமை இயக்கம்.
3 comments:
whatever you say is correct!! but do you think that the scientists, who experiment on others and others materials will support your ideas??
-- Shankar,Chennai
மிக நல்ல சிந்தனை!! ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது?? நீங்களாவது உங்கள் பாபுலாரிட்டியைக் கொண்டு தொடங்குங்கள்... நாங்கள் வருகிறோம் உங்களுடன்.
கமீலா நாசர்
I never know that this kind of good thoughts will come from an actor like you. My apologies for that. Please proceed what you do and we all will be with you. Please read the serial called "அணு ஆட்டம் by SP UdayaKumar" in Anandha Vikatan and support him, who is opposing the Koodankulam Atmoic Project in KoodanKulam. You could be of great help.
Arun,
Toronto, Canada
Post a Comment