Thursday

அன்புச் சின்னம் கிரிக்கெட் மட்டை!!



ஆலந்தூர் தொகுதியின் ஆன்றோர்களே! சான்றோர்களே!

எனது உயிரின் மேலான என் தாய்த் திருநாட்டின் தமிழ்ப் பெருங்குடி மக்களே! எனது தாழ்ப்பணிந்த வணக்கங்கள். நான் மும்பையிலிருந்து நடிப்புக் கல்லூரியில் பயின்று வெறுங்கையோடு சென்னை வந்த நான் முட்டி மோதி நடன கலைஞனாக, பத்திரிக்கையாளனாக இந்த ஆலந்தூரின் படமாக்கப் பட்ட பல திரைப்படங்களில் பணி புரிந்துள்ளேன்!!  எனது திரை வாழ்க்கை தொடங்கியதே இங்கேதான்!! அண்ணன் விஜயகாந்த்தால் அறிமுகப் படுத்தப்பட்ட கேப்டன் பிரபாகரனின் முதல் காட்சியே நமது ஆலந்தூரின் நந்தம்பாக்கம் அருகில்தான் படமாக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளில் எனக்கு ஷூட்டிங் எடுக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் நமது இந்தப் பகுதியில்தான்!! இந்தத் தொகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாகத் தான் நான் இருக்கிறேன்!! நான் மக்களைத் தேடி வருவது முதல் முறையல்ல!! எனக்கு இருபது ஆண்டுக் கால அரசியல் அனுபவம் உள்ளது!

பா ம க வுக்காக இரண்டாண்டுகள் உழைத்தேன். புதிய தமிழகம் சார்பாக 1999 ல் பெரியகுளம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு  ஒரு லட்சம் வாக்குகள் வாங்கினேன்! ஏழாண்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு நிஜ தமிழ் உணர்வோடு போராடியவன் ஐயா நான்!! அ தி மு க வில் சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியவன்! அண்ணன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது , அவருடன் இணையும் எண்ணத்தில் அதிமுக வில் இருந்து விலகினேன்.
ஆனால் அண்ணன் அவர்கள், சினிமாவில் அடி உதை வாங்க மட்டும் மன்சூர் அலிகான் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்  போலும். நான் பதவியைத் தேடி அலைபவன் அல்ல... இன்று இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் மக்களாட்சி
பெரும் கேலிக் கூதாகி விட்டது!! பெரும் பணக்காரர்களும் கொழுத்த ஊழல் பெருச்சாளிகளும் தான் பதவிக்கு வர முடிகிறது!!

                         உங்களின் சட்டமன்ற வேலைக்காரனாக என்னை, எனக்கு மட்டை சின்னத்தில் வாக்களித்து,  சட்டசபைக்கு அனுப்புங்கள். பெரிய பெரிய கட்சிகளின் எஜன்ட்டுகளுக்கு நீங்கள் வாக்களித்து அதன் மூலம் அவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களாக ஆகியதை பார்த்து விட்டோம். தமிழகத் தேர்தல் வரலாற்றில் சுயேச்சையாக நின்ற பலர் வெற்றி பெற்று நேர்மையாக உழைத்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவ்வகையில் எம்.ஜி.ஆர். அவர்களை முதன் முதலில் தேர்ந்தெடுத்த என் தொகுதி மக்களே,,,,, என்னையும் ஆதரித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்!! எனது அலுவலகம் இத்தொகுதியில் 24 மணி நேரமும் செயல் படும். உங்கள் பிரச்சினைகளை, நம் தொகுதி மக்களின் உரிமைகளை அமையவிருக்கிற அரசின் மூலம் தீர்ப்பேன்!!
உங்களுக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக உழைப்பேன்!!  

1 comment:

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

உங்கள் தொகுதி வாழ்பவன்! மிகச்சரியாக சொல்லிருக்கீங்க-- இந்த முறை எங்கள் வாக் கு உங்களுக்குப் போடலாம் எண்டு எண்ணுகிறேன்

-கிறிஸ்டி