Friday

சிந்திப்பீர் மக்களே!!

பூமிப்பந்தை காப்பாற்றுங்கள்!!

இந்த பூமி மலைகள், கடல், நதி,காடுகள் அனைத்தும் இதில் வாழும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் சொந்தமானது.இது வெறும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல!! இயற்கையின் சக்திக்கு முன் மனித சக்தி ஒன்றுமல்ல.. சமீபத்திய உதாரணம் : ஜப்பானில் நடந்த பேரழிவு!! இது நாளை இங்கும் நடக்கும்,, ஏனென்றால் ஜப்பான் வேறு கிரகத்தில் இல்லை.. இந்த உலகம் காப்பாற்றப் பட வேண்டுமானால் ,உடனடியாக  உலகம் முழுமைக்கும் , எங்கும் சுரங்கங்கள் தோண்டப்படக் கூடாது. கனிமங்களுக்காக ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் பூமித்தாய் வெட்டுப் படுவது தடுக்கப்பட வேண்டும். இயற்கை தந்த அரும் பெரும் கொடுப்பினை ஆகிய மலைகளைக் குடைவதும், தகர்ப்பதும் உடனடியாக தடுக்கப் பட வேண்டும். மேலும் இந்த பூமிக்குள் வெடிகுண்டு வைப்பது, அணுகுண்டுகளை வெடித்து பரிசோதிப்பது, ஹைட்ரஜன், நைட்ரஜன் வெடிகுண்டு சோதனை போன்றவை  நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்!!

         இல்லையேல், சிறிது காலங்களிலேயே இந்த உலகமானது, ஒரு பொறி உருண்டையை நாலா பக்கங்களிலும் ஆணியால் குத்தினால் எப்படி உதிருமா அது போன்று இந்த பூமி உருண்டை பொல பொலவென்று உதிர்ந்து விடாதா?  மேலும் பலப்பல சோதனைகள் செய்வதை நிறுத்தாவிட்டால்,  குவாரிகள் என்று பூமியை பல கிலோ மீட்டர்கள் கணக்கில் தோண்டிக்கொண்டே போவதை நிறுத்தாவிட்டால், புவி ஈர்ப்பு விசை குளறுபடி அடைந்து உலகம் அழிந்து விடும்!! 
         அதெப்படி ஆயிராமாயிரம் ஆண்டுகள் இந்த பூமி 24 மணி நேரத்தில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றிவருகின்ற இந்த பூமி மன்சூரலிகான் சொல்வது போல திடீரென்று  எப்படி அழியும் என்று கேட்கலாம்! கோடிக கணக்கான ஆண்டுகளாக இந்த பூமி இயற்கையோடு பாதுகாப்பாக இருந்தது!! ஆனால் இந்த சுமார் இருநூறு ஆண்டுகளாகத்தான் பூமியைக் குடைந்து அணுகுண்டுகள் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு , நிலக்கரி எடுக்க தங்கம் எடுக்க , இரும்பு எடுக்க கிரானைட்,தாதுக்கள் எடுக்க என்று பூமித்தாயை குடை குடை என்று குடைந்து இத பூலோக உருண்டையை ஈயம் பித்தளை பெரீச்சம்பழத்துக்கு போடும் ஓட்டை,உடைசல் பாத்திரமாக்கி விட்டார்கள்! அதன் விளைவுதான் இப்போது ஜப்பான் சுனாமிக்குப் பிறகு, ஜப்பான் நகர்ந்து விட்டதாகவும், பூமியின் அச்சே மாறி விட்டதாகவும் கிடைக்கும் செய்திகள்!

           ஒரு பம்பரத்தை நாம் கையினால் சுழற்றிவிட்டால் பத்து,பதினைந்து அல்லது ஒரு இருபது நொடிகள் சுற்றி விட்டு நின்று விடும்.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு ஈர்ப்பு விசையோடு, ஒரு தாள நயத்தோடு - பெண்ணின் கருவறையில் குழந்தையைச்சுற்றி இருக்கும் பனிக்குடம் போல, ஓசோன் காற்று மண்டலத்தைச்  சுற்றி அமைத்துக்கொண்டு பூப்போல வளம் வந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தை மனிதர்கள் சீரழிப்பது எவ்வாறு நியாயம்?

 இந்த பூமியில் வாழும் அனைத்து  உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம்!

  இந்த பூமித்தாயை காப்பாற்ற உலக அளவில் அனைத்து அறிஞர் பெருமக்களும் திரண்டு உடனடியாக ஒரு மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப் பட வேண்டும்.புயல் வேக வாழ்க்கையில் சொத்து, சுகம்,வசதி என பேராசை வாழ்க்கை வாழ்கிறோம்..... அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போட்டு ஆயிரம் கொடி, லட்சம் கோடி என மேலே மேலே சம்பாதிக்க ... இப்படியே போக ... லட்சக் கணக்கான டன்கள் மணல ஆற்றுப் படுகைகளில் அள்ள அள்ள இந்த பூமி பேராபத்தை நெருங்குகிறது!!

ஒரு நிமிடம் சிந்திப்பீர், செயல்பட வாரீர்!!

இவண்: மக்கள்  மாநாடு கட்சி-தமிழர் களம - தமிழக மக்கள் கட்சி - 
அனைத்திந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கம்-தமிழ் தன்னுரிமை இயக்கம். 

Thursday

அன்புச் சின்னம் கிரிக்கெட் மட்டை!!



ஆலந்தூர் தொகுதியின் ஆன்றோர்களே! சான்றோர்களே!

எனது உயிரின் மேலான என் தாய்த் திருநாட்டின் தமிழ்ப் பெருங்குடி மக்களே! எனது தாழ்ப்பணிந்த வணக்கங்கள். நான் மும்பையிலிருந்து நடிப்புக் கல்லூரியில் பயின்று வெறுங்கையோடு சென்னை வந்த நான் முட்டி மோதி நடன கலைஞனாக, பத்திரிக்கையாளனாக இந்த ஆலந்தூரின் படமாக்கப் பட்ட பல திரைப்படங்களில் பணி புரிந்துள்ளேன்!!  எனது திரை வாழ்க்கை தொடங்கியதே இங்கேதான்!! அண்ணன் விஜயகாந்த்தால் அறிமுகப் படுத்தப்பட்ட கேப்டன் பிரபாகரனின் முதல் காட்சியே நமது ஆலந்தூரின் நந்தம்பாக்கம் அருகில்தான் படமாக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளில் எனக்கு ஷூட்டிங் எடுக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் நமது இந்தப் பகுதியில்தான்!! இந்தத் தொகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாகத் தான் நான் இருக்கிறேன்!! நான் மக்களைத் தேடி வருவது முதல் முறையல்ல!! எனக்கு இருபது ஆண்டுக் கால அரசியல் அனுபவம் உள்ளது!

பா ம க வுக்காக இரண்டாண்டுகள் உழைத்தேன். புதிய தமிழகம் சார்பாக 1999 ல் பெரியகுளம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு  ஒரு லட்சம் வாக்குகள் வாங்கினேன்! ஏழாண்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு நிஜ தமிழ் உணர்வோடு போராடியவன் ஐயா நான்!! அ தி மு க வில் சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியவன்! அண்ணன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது , அவருடன் இணையும் எண்ணத்தில் அதிமுக வில் இருந்து விலகினேன்.
ஆனால் அண்ணன் அவர்கள், சினிமாவில் அடி உதை வாங்க மட்டும் மன்சூர் அலிகான் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்  போலும். நான் பதவியைத் தேடி அலைபவன் அல்ல... இன்று இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் மக்களாட்சி
பெரும் கேலிக் கூதாகி விட்டது!! பெரும் பணக்காரர்களும் கொழுத்த ஊழல் பெருச்சாளிகளும் தான் பதவிக்கு வர முடிகிறது!!

                         உங்களின் சட்டமன்ற வேலைக்காரனாக என்னை, எனக்கு மட்டை சின்னத்தில் வாக்களித்து,  சட்டசபைக்கு அனுப்புங்கள். பெரிய பெரிய கட்சிகளின் எஜன்ட்டுகளுக்கு நீங்கள் வாக்களித்து அதன் மூலம் அவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களாக ஆகியதை பார்த்து விட்டோம். தமிழகத் தேர்தல் வரலாற்றில் சுயேச்சையாக நின்ற பலர் வெற்றி பெற்று நேர்மையாக உழைத்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவ்வகையில் எம்.ஜி.ஆர். அவர்களை முதன் முதலில் தேர்ந்தெடுத்த என் தொகுதி மக்களே,,,,, என்னையும் ஆதரித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்!! எனது அலுவலகம் இத்தொகுதியில் 24 மணி நேரமும் செயல் படும். உங்கள் பிரச்சினைகளை, நம் தொகுதி மக்களின் உரிமைகளை அமையவிருக்கிற அரசின் மூலம் தீர்ப்பேன்!!
உங்களுக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக உழைப்பேன்!!